Wednesday, January 20, 2010

முடிவு பெறாத அன்பு..

முடிவு பெறாத அன்பு...

என்னை ஈன்றடுத்த
அன்னையே !!
என்ன தவம் புரிந்தேனோ
உன் மடியினில்
தவழ்ந்திட !!

நாளும் ஒரு அலங்காரமாய்
நாள்தொறும் உன்
அணைப்பில் !!
நாட்கள் கடப்பதும்
தெரியவில்லை
நான் வளர்வதும்
அறியவில்லை !!

ஆசையாய் நீ தந்த
முத்தங்கள் தேகம்
எங்கும் இனிக்கிறது
நீ எனக்கு அளித்த
பட்ட பெயர்களுக்கு
முன்னாள் நான்
வாங்கிய பட்டங்கள்
காணமல்போனதே !!

முடிவு பெறாத
உன் அன்பினில்
முடிக்க முடியாத
என் கவிதை
தாயே !! ..

No comments:

Post a Comment