Thursday, January 21, 2010

அலைபேசி !!!

கண்கள் இரண்டும்
சந்திக்காமல் போனாலும்
செவிகள் இரண்டும்
சந்தித்திடும் எனக்காய்
நீ தந்த அலைபேசி
வழியாய் !!!

கண்ணில் தோன்றி
இதயத்தில் முடிந்த காதல்
எத்தனையோ
உதட்டில் தோன்றி
செவியில் சேர்ந்த
காதல் ஒன்றே !!!!

அலைபேசி வழிவந்த
அழகு முத்தங்கள்
அலையாய் என் உள்ளத்தில்
அசைந்தாடின
சொல்லில் அடங்கா
உன் எண்ணங்கள் உலகை
கிறங்கடித்தன ..

மிதக்கிறேன் உன்
அன்பில்
மீளும் வழித்தெரியாமல் ....

No comments:

Post a Comment