Wednesday, May 12, 2010

என்னில் வழியும் கண்ணீர்துளிகள்
விரலைப் பிடித்து அழுதுக்கொண்டே
போகமாட்டேன் என மணலில்
விழுந்து புரண்ட என் முதல்
வகுப்பறையை
நினைவுப்படுதிச்செல்லும்

என்னிடத்தில் நட்பு கொள்ளும்
ஒவ்வொருவரும்
கரம் பற்றி அழைத்துச்சென்ற
முதல் தோழியை கண்ணின்
எதிரே கொண்டு வந்து
செல்கின்றனர்

எழுதும் ஒவ்வொரு
வார்த்தைகளும்
"அம்மா" என்று எழுதிய
முதல் வார்த்தையை
நினைக்க தூண்டும்

ஆயிரம் கவிகள் வரைந்தாலும்
"என் தந்தை " என்று எழுதிய
முதல் கவிதைக்கு ஈடாகுவதில்லை
இன்றும்

இசை என்றதும் நினைவில்
ஊஞ்சலாடுவது
தினமும் உற்சாகப் படுத்திய
"வீணை"
ஆசையுடன் பயின்ற
"நாட்டியம்"

என்றுமே என் நினைவில்
நீங்காத அந்த உணர்வுகளை
இன்றும் மறந்திட மனமில்லை

என் நினைவிலும் நிஜத்திலும்
பயணித்துக்கொண்டே இருக்கின்றன
அந்த அழகிய நாட்கள் !!!!!

Thursday, May 6, 2010

அக நட்பு .....


தொடங்கிய இடத்தை தேடியே
தொடரும் நாட்களை
தொலைக்கிறேன்
இன்றும் புலப்படவில்லை
என்று உன்னிடம்
முதன் முதலாய்
நட்புக்கொண்டேன் என்று

அழகான புன்னகையுடன்
தொடங்கிய நம் நட்பு
இன்றும் புன்னகையுடனே
தொடர்கிறது..

ஆயிரம் சோகங்கள்
கொண்டாலும்
அன்பான உன் குரல்
அத்தனையும் தொலைத்து
விடும்
ஆனந்தத்தை மட்டுமே
விட்டுச்செல்லும்

என்னை நீ அறிந்தும்
உன்னை நான் அறிந்தும்
முகம் அறியா
நம் நட்பு..
முகவரியுடன் தொடரும் ...