Sunday, June 6, 2010

என் பிரியமான தோழியே

நேற்றுதான் பழகியது
போன்ற நினைவு
அதற்குள் பல ஆண்டுகள்
உருண்டோடி போனது

எத்தனை பரிமாறல்கள்..
எத்தனை சண்டைகள்
அத்தனையும் இனிமையாய்
மனதில்

உனக்கென நான்
காத்திருந்தது
என்னை காக்க வைக்கவே
நீ தாமதமாக
வருவது

இன்றும் பசுமையான
நினைவுகள் அது

நாம் பிரியா வரம்
வேண்டும் என்றோம்
அன்று
இன்றும் இதையே வரமாக
கேட்போம் என்று
அறியாமல்..

ஆயிரம் உண்டு
நம்மிடையே மோதல்
இருந்தும் இருந்திடதான்
செய்கிறது நம்
நட்பில் ஒரு காதல்

குறையாமல் கிடைத்திடும்
உன் அன்பினை
சிந்தாமல் சேர்த்திடுவேன்
என் உயிரினில்
என் பிரியமான தோழியே

காதலின் வலி

உன்னிடத்தில் சொல்ல நினைத்து
உன்னருகே வரும் நான்
சொல்லாமலே போகிறேன்
நிஜத்திலும் உன் நினைவிலும்

நித்திரை தொலைத்து
கவிகள் வடித்திட தோன்றும்
வார்தைகளின்றி தவிப்பது
யாருக்கு தெரியும்...

தொலைந்தன கவிதைகள்
தொடர்கின்றன உன் நினைவுகள்

"ஒரு" தலையாகவே நேசிக்கும் நான்
உன்னிடத்தில் ஒன்றாகவே இருக்கிறேன்
"இரு" தலையாக மாறினால் ஏனோ
இடைவெளி தெரிகிறது
வார்தையில்கூட தனித்து வாழ
நினைக்க முடிவதில்லையே
சொல்லாமலே எப்படி வாழ்வின்
உன் மனதிலும் வாழ்வின் வழியிலும்

என் பாதை நீயேயடி என்று நீ சொல்லும்
தருணத்தில் எந்தன் வாழ்வும்
நீயென்று என்னுயிரும் சொல்லுமடா
அதுவரை...நீயாகவே இருக்கும் உன்னை
நானாகவே இருந்து நேசிக்கிறேன்
காதலின் வலியோடு விழியின் நீரோடு