Sunday, June 6, 2010

என் பிரியமான தோழியே

நேற்றுதான் பழகியது
போன்ற நினைவு
அதற்குள் பல ஆண்டுகள்
உருண்டோடி போனது

எத்தனை பரிமாறல்கள்..
எத்தனை சண்டைகள்
அத்தனையும் இனிமையாய்
மனதில்

உனக்கென நான்
காத்திருந்தது
என்னை காக்க வைக்கவே
நீ தாமதமாக
வருவது

இன்றும் பசுமையான
நினைவுகள் அது

நாம் பிரியா வரம்
வேண்டும் என்றோம்
அன்று
இன்றும் இதையே வரமாக
கேட்போம் என்று
அறியாமல்..

ஆயிரம் உண்டு
நம்மிடையே மோதல்
இருந்தும் இருந்திடதான்
செய்கிறது நம்
நட்பில் ஒரு காதல்

குறையாமல் கிடைத்திடும்
உன் அன்பினை
சிந்தாமல் சேர்த்திடுவேன்
என் உயிரினில்
என் பிரியமான தோழியே

காதலின் வலி

உன்னிடத்தில் சொல்ல நினைத்து
உன்னருகே வரும் நான்
சொல்லாமலே போகிறேன்
நிஜத்திலும் உன் நினைவிலும்

நித்திரை தொலைத்து
கவிகள் வடித்திட தோன்றும்
வார்தைகளின்றி தவிப்பது
யாருக்கு தெரியும்...

தொலைந்தன கவிதைகள்
தொடர்கின்றன உன் நினைவுகள்

"ஒரு" தலையாகவே நேசிக்கும் நான்
உன்னிடத்தில் ஒன்றாகவே இருக்கிறேன்
"இரு" தலையாக மாறினால் ஏனோ
இடைவெளி தெரிகிறது
வார்தையில்கூட தனித்து வாழ
நினைக்க முடிவதில்லையே
சொல்லாமலே எப்படி வாழ்வின்
உன் மனதிலும் வாழ்வின் வழியிலும்

என் பாதை நீயேயடி என்று நீ சொல்லும்
தருணத்தில் எந்தன் வாழ்வும்
நீயென்று என்னுயிரும் சொல்லுமடா
அதுவரை...நீயாகவே இருக்கும் உன்னை
நானாகவே இருந்து நேசிக்கிறேன்
காதலின் வலியோடு விழியின் நீரோடு

Wednesday, May 12, 2010

என்னில் வழியும் கண்ணீர்துளிகள்
விரலைப் பிடித்து அழுதுக்கொண்டே
போகமாட்டேன் என மணலில்
விழுந்து புரண்ட என் முதல்
வகுப்பறையை
நினைவுப்படுதிச்செல்லும்

என்னிடத்தில் நட்பு கொள்ளும்
ஒவ்வொருவரும்
கரம் பற்றி அழைத்துச்சென்ற
முதல் தோழியை கண்ணின்
எதிரே கொண்டு வந்து
செல்கின்றனர்

எழுதும் ஒவ்வொரு
வார்த்தைகளும்
"அம்மா" என்று எழுதிய
முதல் வார்த்தையை
நினைக்க தூண்டும்

ஆயிரம் கவிகள் வரைந்தாலும்
"என் தந்தை " என்று எழுதிய
முதல் கவிதைக்கு ஈடாகுவதில்லை
இன்றும்

இசை என்றதும் நினைவில்
ஊஞ்சலாடுவது
தினமும் உற்சாகப் படுத்திய
"வீணை"
ஆசையுடன் பயின்ற
"நாட்டியம்"

என்றுமே என் நினைவில்
நீங்காத அந்த உணர்வுகளை
இன்றும் மறந்திட மனமில்லை

என் நினைவிலும் நிஜத்திலும்
பயணித்துக்கொண்டே இருக்கின்றன
அந்த அழகிய நாட்கள் !!!!!

Thursday, May 6, 2010

அக நட்பு .....


தொடங்கிய இடத்தை தேடியே
தொடரும் நாட்களை
தொலைக்கிறேன்
இன்றும் புலப்படவில்லை
என்று உன்னிடம்
முதன் முதலாய்
நட்புக்கொண்டேன் என்று

அழகான புன்னகையுடன்
தொடங்கிய நம் நட்பு
இன்றும் புன்னகையுடனே
தொடர்கிறது..

ஆயிரம் சோகங்கள்
கொண்டாலும்
அன்பான உன் குரல்
அத்தனையும் தொலைத்து
விடும்
ஆனந்தத்தை மட்டுமே
விட்டுச்செல்லும்

என்னை நீ அறிந்தும்
உன்னை நான் அறிந்தும்
முகம் அறியா
நம் நட்பு..
முகவரியுடன் தொடரும் ...

Monday, January 25, 2010

மழை

ஜில்லென்ற மழையில்
ஜன்னலோரம் நிற்கையில்
சொட்டு சொட்டாக
விழுந்த தண்ணீர்
சிந்திய கண்ணீரை
ஞாபகப்படுத்த
ஓர விழி பார்வையில்
ஓய்வின்றி தேடினேன்
உன்னை...

விழியினில் தோன்றிட
விருப்பம் இல்லை போலும்
மறைந்து சென்ற
உன் பிம்பம்
மறுக்காமல் சொல்லிட
ஈரமாகிப்போனது
கண்களும் ...

நிழல் அது மறைந்தாலும்
உன் நினைவது
நிற்காத மழையாய்
விழியிலும்
வாழ்வின் வழியிலும் !!!

காதல்

தேடிப் பார்கிறேன்
எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு
உனக்குள் இருக்கும் என்னை
தேடலிலும் நீதான்
கண்ணடித்து நிற்கிறாய்
தேடி தேடி தேய்ந்து
போகிறது காதல் உன்
தேகம் காணமல் !!!!

ஏக்கங்களுடன் உன்னுயிர் !!!

நீ பேசாமலே விட்டுப்போன
வார்த்தைகளை தேடி எடுத்து
முடிக்கையில் விடிந்தே விடுகிறது
இனி எப்படி உறங்க...
ஒவ்வொரு விடியலும்
எழுதப்படாத கவிதையாய்
என் முன்னே...

வர்ணித்திடாத வார்த்தைகளாய்
வாசித்திடாத புத்தகமாய்
கனவில் மட்டுமே
வந்து செல்லும்
என் உயிரே!!!!
நிஜத்தில் என்று உன்
முகம் காண்பேன்...
ஏக்கங்களுடன் உன்னுயிர் !!!!